KAYALPATNAM WELFARE ASSOCIATION OF UNITED KINGDOM WELCOMES YOU ALL

KAYALPATNAM WELFARE ASSOCIATION OF UNITED KINGDOM WELCOMES YOU ALL
Email: uk@kayalpatnam.org.uk / Web: www.kayalpatnam.org.uk

Monday, March 24, 2014

ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றம் (KWAUK) மற்றும் துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளி இணைந்து நடத்தும் 'பெண்களுக்கான முதலுதவி பயிற்சி வகுப்பு'


ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றம் (KWAUK)  மற்றும் துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளி இணைந்து நடத்தும் 'மூன்றாவது முதலுதவி பயிற்சி வகுப்பு' (பெண்கள் மட்டும்), வருகின்ற ஏப்ரல் மாதம்  06ஆம் தேதி, துளிர் கேளரங்கத்தில், பகல்  02.00 மணி முதல் மாலை 06.30 மணி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த பயிற்சி வகுப்பை தூத்துக்குடி செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் பயிற்சியாளர்கள் நடத்தி தர இசைந்துள்ளார்கள். 

பெண்களுக்கான சிறப்பு வகுப்பாக இந்த முதலுதவி பயிற்சி முகாம் ஏற்பாடு செயப்பட்டுள்ளது. குறிப்பாக வீடுகளில் ஏற்படும் விபத்துக்களை எவ்வாறு தடுப்பது மற்றும் கையாள்வது என்பதை பற்றி பயிற்றுவிக்கப்படும். இந்த வகுப்பில் கலந்து கொள்ள மொத்தம் 60 இடங்கள் மட்டுமே உள்ளன. 

பயிற்சி வகுப்பின் (சலுகை) கட்டணம் ரூபாய் 100 மட்டுமே. ( சான்றிதழ்,போக்குவரத்து,சிற்றுண்டி உட்பட)

இன்ஷா அல்லாஹ் இன்று (13-03-2014 - வியாழக்கிழமை) முதல் கீழ்காணும் இடங்களில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும்.

1.   கலாமி பேஷன், USC கால்பந்து வணிக வளாகம், காயல்பட்டினம்  தொலைபேசி எண்: 284777
2.   ஜாஸ்மின் பாரடிஸ், மெயின் ரோடு, காயல்பட்டினம் தொலைபேசி எண்: 280345
3.   LMS  ஸ்டோர்ஸ், மொஹிதீன் தெரு, காயல்பட்டினம்  தொலைபேசி எண்: 281463            
4.   MAZAYA  மெடிகல்ஸ், சதுக்கை தெரு, காயல்பட்டினம்  தொலைபேசி எண்: 285770

இந்த வகுப்பில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சியின் இறுதியில் தேர்வு பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

இம்முகாமில் பெறப்படும் கட்டணம் அனைத்தும் துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளிக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்பதை அறிய தருகின்றோம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கட்டணத்துடன் சமர்ப்பிக்கும் கடைசி நாள்: 31.03.2014

மேலதிக விபரங்களுக்கு எங்களது மின்னஞ்சல் முகவரியில் - uk@kayalpatnam.org.ukதொடர்பு கொள்ளவும் 

முதலுதவி கற்போம்... மனித உயிர் காப்போம்....