KAYALPATNAM WELFARE ASSOCIATION OF UNITED KINGDOM WELCOMES YOU ALL

KAYALPATNAM WELFARE ASSOCIATION OF UNITED KINGDOM WELCOMES YOU ALL
Email: uk@kayalpatnam.org.uk / Web: www.kayalpatnam.org.uk

Wednesday, November 16, 2016

ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் 14வது பொதுக்குழு கூட்டம் மற்றும் ஹஜ்ஜுப்பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி....

ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் 14வது பொதுக்குழு கூட்டம் மற்றும் ஹஜ்ஜுப்பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி குறித்து , அம்மன்றத்தின் துணைத்தலைவர் ஹாபிழ் அப்துல் மத்தீன் லபீப் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

க்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் பதினான்காவது  பொதுக்குழுக்கூட்டம் மற்றும் ஹஜ்ஜுப்பெருநாள்  ஒன்றுகூடல் நிகழ்ச்சி, அக்டோபர் மாதம் 1ஆம் தேதி, மார்டன் மாநகரில் அமைந்துள்ள கிராம சமுதாய அரங்கில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
Inline images 1

கூட்ட நிகழ்வுகள்:

கூட்டத்திற்கு மன்றத் தலைவர் டாக்டர் செய்யித் அஹ்மத் தலைமை தாங்கினார். மன்றத்தின் துணைதலைவர் ஹாபில் அப்துல் மத்தீன் லபீப் முன்னிலை வகித்து வந்தோரை வாழ்த்தி வரவேற்றார். மன்றத்தின் துணைதலைவர் ஹாபில் அப்துல் மத்தீன் லபீப் அவர்களின் புதல்வி பாத்திமா கிராஅத் ஓதி பொதுகூட்டத்தைத் துவக்கி வைத்தார்.

Inline images 2

தலைவர் உரை:

பின்னர் கூட்டத் தலைவர் டாக்டர் செய்யித் அஹ்மத் தலைமையுரையாற்றினார். அதில் மன்றத்தின் கடந்த கால பணிகள் குறித்தும், மேலும் மன்றம் ஆற்ற வேண்டிய பணிகளை மிக அழகுடன் விளக்கினார்கள். 

Inline images 3

துணை தலைவர் உரை:
பின்னர் மன்ற துணைத்தலைவர் ஹாபிழ் அப்துல் மத்தீன் லபிப் அவர்கள் நம் மன்றத்தால் நடத்தப்படும் திட்டங்கள் மிகுந்த தரத்துடன் இருக்க வேண்டிய அவசியத்தையும், அதன் மூலம் நாம் பிற்காலத்தில் அடைய இருக்கிற பலன்களையும் அழகுடன் எடுத்துரைத்தார்கள். 

Inline images 4

செயலாளர் உரை:
பின்னர் மன்றத்தின் செயலாளர் டாக்டர் அபு தம்பி அவர்கள் மன்றம் நடத்தும் பணிகளின் தரத்தின் அவசியத்தை விளக்கினார்கள். மேலும் நமதூர் நகராட்சியின் செயல்பாடுகள் குறித்தும், அதை மேம்படுத்துவது முறைகள் குறித்து எடுத்துரைத்தார்கள்.

Inline images 5

வரவு - செலவு கணக்கறிக்கை:
பின்னர், சென்ற கூட்ட நடப்புகள் மற்றும் மன்றத்தின் வரவு - செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் சதகதுல்லாஹ் குளம் அவர்கள் விளக்கிப் பேசினார். மன்றத்தின் சந்தாவை அதிகரிக்க வேண்டும் என்றும் அதன் மூலம் பல செயல் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்றும் கூறினார்.

கலந்துரையாடல்:
பின்னர் மன்ற உறுப்பினர்களுக்கு இடையே திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. பிறகு மதிய தொழுகைக்கு பின்னர் உணவு விருந்தோம்பல் நடைபெற்றது.

மரபுச்சொல் மற்றும் வினாடி-வினா போட்டி:
சிறார்களின் நிகழ்சிகளை தொடர்ந்து, வினாடி-வினா போட்டி நடைபெற்றது. மன்றத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, நம் தாயகமாம் காயல்பட்டினம் நகரின் மரபுச் சொல்வழக்கை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட போட்டி, உறுப்பினர்களிடையே மிகுந்த மனமகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தந்து, சில மணி நேரங்கள் ஊரிலேயே இருந்த அனுபவத்தைப் பெற்றுத் தந்தது.

தமிழ் மொழித் தொடர்பு முற்றிலும் அற்றுப்போன ஐக்கிய ராஜ்ஜியம் நாட்டில் இதுபோன்ற போட்டிகள் அடிக்கடி நடத்தப்பட்டால், வளரும் தலைமுறைக்கு தாய்மொழியுடன் தொடர்பிருந்துகொண்டே இருக்கும் என்பது அங்கு அனைவராலும் உணரப்பட்டது. 

இப்பொதுக்குழுவின் ஏற்பாடுகளை மன்றத்தின் உறுப்பினர் அபுல் ஹசன் அவர்கள் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் 1:
காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கிய பேரவைக்கு,  இப்பொதுக்குழு தனது முழுமையான ஆதரவை தெரிவிக்கின்றது.

தீர்மானம் 2:
மன்றப் பொருளாளரால் சமர்ப்பிக்கப்பட்ட மன்றத்தின் வரவு-செலவு (2015-2016) கணக்கறிக்கையை இப்பொதுக்குழு ஒருமனதாக அங்கீகரிகின்றது.

தீர்மானம் 3: 
மன்றத்தின் அடுத்த கூட்டத்தை வரும்  ஏப்ரல் மாதம் நடத்துவதென தீர்மானிக்ப்பட்டது. தேதி மற்றும் நிகழ்விடம் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும்.

தீர்மானம் 4:
மன்ற உறுப்பினர்கள் தெரிவித்த ஆலோசனைகள் மற்றும் திட்டங்களை, காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கிய பேரவைக்கு கடிதமாக அனுப்புவதென்று தீர்மானிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மன்ற உறுப்பினர்களின் துவாவுடன் நிகழ்சிகள் இனிதே நிறைவுபெற்றது.

Saturday, November 12, 2016

ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் 14-வது பொதுக்குழு மற்றும் குடும்ப ஒன்றுகூடல் விழா அழைப்பிதழ் ....

ஐக்கிய ராஜ்ய காயல் நல மன்றத்தின் 14ஆவது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப ஒன்றுகூடல் நிகழ்ச்சி, 01.10.2016 சனிக்கிழமையன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்க காயலர்களுக்கு அழைப்பு விடுத்து, அம்மன்றத்தின் துணைத்தலைவர் ஹாஃபிழ் அப்துல் மத்தீன் லபீப் வெளியிட்டுள்ள அறிக்கை:- 

அன்பின் ஐக்கிய ராஜ்ஜியம் வாழ் காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). நமது ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் 14வது பொதுக்குழுக் கூட்டம், இன்ஷா அல்லாஹ்   1st April Saturday 2016 , மார்டன் மாநகரில், காலை 11.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ். 

Time:
11.00 A.M to 06.00 P.M.
Venue: 
Resident's Pavilion

இன்ஷாஅல்லாஹ் நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தை மேலும் மெருகூட்டும் வகையில் நமது மன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் பல்வேறு அணிகளுக்கான வினாடி-வினா போட்டி, நம் தாயகமாம் காயல்பட்டினம் நகரின் மரபுச் சொல் போட்டி, குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், ஆண்கள் -பெண்களுக்கான ‘120 வினாடி தொடர் பேச்சுப்போட்டி‘ மற்றும் வெளிப்புற விளையாட்டுப் போட்டிகளுக்கும் (outdoor games) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மன்றம் துவக்கபட்டது முதல் இன்று வரையுள்ள மன்ற செயல்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் விளக்கப்படவுள்ளது. 

எனவே, தாங்களனைவரும் இச்செய்தியையே அழைப்பாகக் கொண்டு, அனைத்து நிகழ்வுகளிலும் தவறாமல் பங்கேற்க வருமாறும், இத்தகவலை தங்களுக்கு அறிமுகமான நம் மன்ற உறுப்பினர்கள் மற்றும் காயலர்களுக்குத் தெரிவித்து, அவர்களையும் பங்கேற்கச் செய்திடுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

இப்பொதுகுழுவின் உள்ளூர் பிரிதிநிதியாக, மன்றத்தின் உறுப்பினர் சகோதரர் அபுல்ஹசன்  அவர்கள் செயல்படுவார்கள் என்றும் தெரிவித்து கொள்கின்றோம்.

ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் 13-வது பொதுக்குழு மற்றும் குடும்ப ஒன்றுகூடல் விழா அழைப்பிதழ் ....

ஐக்கிய ராஜ்ய காயல் நல மன்றத்தின் 13ஆவது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப ஒன்றுகூடல் நிகழ்ச்சி, 09.04.2016 சனிக்கிழமையன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்க காயலர்களுக்கு அழைப்பு விடுத்து, அம்மன்றத்தின் துணைத்தலைவர் ஹாஃபிழ் அப்துல் மத்தீன் லபீப் வெளியிட்டுள்ள அறிக்கை:- 

அன்பின் ஐக்கிய ராஜ்ஜியம் வாழ் காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). நமது ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் 13வது பொதுக்குழுக் கூட்டம், இன்ஷா அல்லாஹ்   9th April Saturday 2016 , ப்ரென்ட் வூட் மாநகரில், காலை 11.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ். 

Time:
11.00 A.M to 06.00 P.M.
Venue: 
Shenfield Parish Hall
60 Hutton Road
Brentwood
CM15 8LB

இன்ஷாஅல்லாஹ் நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தை மேலும் மெருகூட்டும் வகையில் நமது மன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் பல்வேறு அணிகளுக்கான வினாடி-வினா போட்டி, நம் தாயகமாம் காயல்பட்டினம் நகரின் மரபுச் சொல் போட்டி, குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், ஆண்கள் -பெண்களுக்கான ‘120 வினாடி தொடர் பேச்சுப்போட்டி‘ மற்றும் வெளிப்புற விளையாட்டுப் போட்டிகளுக்கும் (outdoor games) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மன்றம் துவக்கபட்டது முதல் இன்று வரையுள்ள மன்ற செயல்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் விளக்கப்படவுள்ளது. 

எனவே, தாங்களனைவரும் இச்செய்தியையே அழைப்பாகக் கொண்டு, அனைத்து நிகழ்வுகளிலும் தவறாமல் பங்கேற்க வருமாறும், இத்தகவலை தங்களுக்கு அறிமுகமான நம் மன்ற உறுப்பினர்கள் மற்றும் காயலர்களுக்குத் தெரிவித்து, அவர்களையும் பங்கேற்கச் செய்திடுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

இப்பொதுகுழுவின் உள்ளூர் பிரிதிநிதியாக, மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் சகோதரர் ஹசன் மரைகார் அவர்கள் செயல்படுவார்கள் என்றும் தெரிவித்து கொள்கின்றோம்.

Saturday, November 21, 2015

ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் 12-வது  பொதுக்குழு மற்றும் குடும்ப ஒன்றுகூடல் விழா அழைப்பிதழ் ....

ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் 12-வது பொதுக்குழு மற்றும் குளிர் கால குடும்ப ஒன்றுகூடல்  நிகழ்ச்சி , இன்ஷா அல்லாஹ் வருகின்ற நவம்பர் மாதம் 28ஆம் தேதி, நார்த்ஹாம்ப்டன்  மாநகரில் அமைந்துள்ள வூட்டன் சமுதாய கூடத்தில், காலை 10.00ணி முதல் மாலை 05.00 மணி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்..

இடம்:
Wooton Community and Sports Centre
Curtlee Hill
Wooton
Northampton
NN4 6ED

0.jpg

இன்ஷாஅல்லாஹ் நடைபெறவிருக்கும் க்கூட்டத்தை மேலும் மெருகூட்டும் வகையில் நமது மன்ற உறுப்பினர்கள்  பங்கேற்கும் பல்வேறு போட்டிகள் மற்றும் நிகழ்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

  • வினாடி-வினா போட்டி,
  • காயல் மரபுச் சொல் போட்டி
  • புகைப்படங்கள் மூலம் காயல் சொல் போட்டி, 
  • குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்
  • ஆண்கள் -பெண்களுக்கான ‘120 வினாடி தொடர் பேச்சுப்போட்டி'
  • சிறந்த தம்பதிகளுக்கான போட்டி 
  • மருத்துவர்களின் கேள்வி - பதில் நிகழ்ச்சி  மற்றும் 
  • வெளிப்புற விளையாட்டுப் போட்டிகளுக்கும் (outdoor games) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இயந்திரத்தனமான நகர வாழ்க்கையின் பரபரப்பை மறந்து மகிழ்வுற்றிப்பதற்காகஇந்த அரிய வாய்ப்பை மன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு அத்தேதியில் உங்களின் அனைத்து சொந்த வேலைகளுக்கும் மாற்று ஏற்பாடுகள் செய்துவிட்டுகூட்டத்தில் முழுமையாகக் கலந்து மகிழவும்மகிழ்விக்கவும் அன்புடன் அழைக்கின்றோம்.

இப்பொதுக்குழுவின் உள்ளூர் பிரதிநிதியாக மன்றத்தின் பொருளாளர் குளம் சதகதுல்லாஹ் அவர்கள் செயல்படுவார்கள்  என்பதை தெரிவித்து கொள்கின்றோம். 

உங்கள் யாவருக்கும் கருணையுள்ள அல்லாஹ் நல்லருள் புரிவானாக ஆமீன்....

மேலதிக தொடர்புகளுக்கு எங்களது இணையதளம் (www.kayalpatnam.org.uk) அல்லது மின்னஞ்சல் (uk@kayalpatnam.org.uk) மூலம் தொடர்பு கொள்ளவும்....

Wednesday, April 1, 2015

11th General Body Meeting - Leicester 2015

Dear All

Assalamu Alaikum Wrbh....

May the peace, mercy and blessings of Almighty Allah be on all of you.

This email is just the quick reminder of our 11th general body meeting which is going to be held in Leicester In shaa Allah....

Date:
11.04.2015 - Saturday

Time and Venue :
10.00 am to 6:00 pm

Address:
Stamford Street
Glenfield
Leicester
LE3 8DL

Local Co-ordinator: Shahul Jiffri Kareem

Nearest Railway Station: Leicester
(Please inform shahul for station pick up)

Cheaper to book a coach from national express.com
(Price from £12 / return)

Stay: Premier Inn --- Leicester --- From £39 / night (For Family)
         Ibis Budget North Services --- From £29 / night

ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் 6-ஆம் ஆண்டு துவக்க விழா,11-வது பொதுக்குழு மற்றும் குடும்ப ஒன்றுகூடல் விழா அழைப்பிதழ் ....

ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின்  6-ஆம் ஆண்டு துவக்க விழா,11-வது  பொதுக்குழு மற்றும் கோடை கால குடும்ப ஒன்றுகூடல் நிகழ்ச்சி குறித்து, மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் / செய்தி தொடர்பாளர்  ஷாகுல் ஜிப்ரி கறீம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:  

ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின்  6-ஆம் ஆண்டு துவக்க விழா,11-வது  பொதுக்குழு மற்றும் குடும்ப ஒன்றுகூடல்  நிகழ்ச்சி , இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி, லெஸ்டர்  மாநகரில் அமைந்துள்ள க்லென்பீல்ட் நினைவு கூடத்தில், காலை 10.00ணி முதல் மாலை 06.00 மணி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்..

இடம்:
Glenfield Memorial Hall
Stamford Street
Glenfield
Leicester
LE3 8DL

இன்ஷாஅல்லாஹ் நடைபெறவிருக்கும் க்கூட்டத்தை மேலும் மெருகூட்டும் வகையில் நமது மன்ற உறுப்பினர்கள்  பங்கேற்கும் பல்வேறு போட்டிகள் மற்றும் நிகழ்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

  • வினாடி-வினா போட்டி,
  • காயல் மரபுச் சொல் போட்டி
  • புகைப்படங்கள் மூலம் காயல் சொல் போட்டி, 
  • குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்
  • ஆண்கள் -பெண்களுக்கான ‘120 வினாடி தொடர் பேச்சுப்போட்டி'
  • சிறந்த தம்பதிகளுக்கான போட்டி 
  • மருத்துவர்களின் கேள்வி - பதில் நிகழ்ச்சி  மற்றும் 
  • வெளிப்புற விளையாட்டுப் போட்டிகளுக்கும் (outdoor games) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இயந்திரத்தனமான நகர வாழ்க்கையின் பரபரப்பை மறந்து மகிழ்வுற்றிப்பதற்காகஇந்த அரிய வாய்ப்பை மன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு அத்தேதியில் உங்களின் அனைத்து சொந்த வேலைகளுக்கும் மாற்று ஏற்பாடுகள் செய்துவிட்டுகூட்டத்தில் முழுமையாகக் கலந்து மகிழவும்மகிழ்விக்கவும் அன்புடன் அழைக்கின்றோம்.

இப்பொதுக்குழுவின் உள்ளூர் பிரதிநிதியாக மன்றத்தின் செயற்க்குழு உறுப்பினர் ஷாகுல் ஜிப்ரி கரீம்  அவர்கள் செயல்படுவார்கள்  என்பதை தெரிவித்து கொள்கின்றோம். 

உங்கள் யாவருக்கும் கருணையுள்ள அல்லாஹ் நல்லருள் புரிவானாக ஆமீன்....

மேலதிக தொடர்புகளுக்கு எங்களது இணையதளம் (www.kayalpatnam.org.uk) அல்லது மின்னஞ்சல் (uk@kayalpatnam.org.uk) மூலம் தொடர்பு கொள்ளவும்....