KAYALPATNAM WELFARE ASSOCIATION OF UNITED KINGDOM WELCOMES YOU ALL

KAYALPATNAM WELFARE ASSOCIATION OF UNITED KINGDOM WELCOMES YOU ALL
Email: uk@kayalpatnam.org.uk / Web: www.kayalpatnam.org.uk

Saturday, April 6, 2013

KWAUK - 6TH GENERAL BODY MEETING - BRENTWOOD


அன்பின் ஐக்கிய ராஜ்ஜியம் வாழ் காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). நமது ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் ஆறாவது பொதுக்குழுக் கூட்டம், இன்ஷா அல்லாஹ்   8th September Saturday 2012 , ப்ரென்ட் வூட் மாநகரில் அமைந்துள்ள Hutton Poplar Lodge உள்ளரங்கில் காலை 11.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ். 

Time:
11.00 A.M to 06.00 P.M.
Venue: 
HUTTON POPLARS LODGE
POPLAR'S DRIVE
HUTTON
BRENTWOOD
ESSEX
CM1 3BA



இன்ஷாஅல்லாஹ் நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தை மேலும் மெருகூட்டும் வகையில் நமது மன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் பல்வேறு அணிகளுக்கான வினாடி-வினா போட்டி, நம் தாயகமாம் காயல்பட்டினம் நகரின் மரபுச் சொல் போட்டி, குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், ஆண்கள் -பெண்களுக்கான ‘120 வினாடி தொடர் பேச்சுப்போட்டி‘ மற்றும் வெளிப்புற விளையாட்டுப் போட்டிகளுக்கும் (outdoor games) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மன்றம் துவக்கபட்டது முதல் இன்று வரையுள்ள மன்ற செயல்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் விளக்கப்படவுள்ளது. 

எனவே, தாங்களனைவரும் இச்செய்தியையே அழைப்பாகக் கொண்டு, அனைத்து நிகழ்வுகளிலும் தவறாமல் பங்கேற்க வருமாறும், இத்தகவலை தங்களுக்கு அறிமுகமான நம் மன்ற உறுப்பினர்கள் மற்றும் காயலர்களுக்குத் தெரிவித்து, அவர்களையும் பங்கேற்கச் செய்திடுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

இப்பொதுகுழுவின் உள்ளூர் பிரிதிநிதியாக, மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் சகோதரர் ஹசன் மரைகார் அவர்கள் செயல்படுவார்கள் என்றும் தெரிவித்து கொள்கின்றோம்.