KAYALPATNAM WELFARE ASSOCIATION OF UNITED KINGDOM WELCOMES YOU ALL

KAYALPATNAM WELFARE ASSOCIATION OF UNITED KINGDOM WELCOMES YOU ALL
Email: uk@kayalpatnam.org.uk / Web: www.kayalpatnam.org.uk

Monday, November 29, 2010

ஐக்கிய ராஜ்ஜியம் காயல் நல மன்ற கூட்ட அழைப்பு!

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்,

நமது ஐக்கிய ராஜ்ஜியம் காயல் நல மன்ற பொதுக்குழு கூட்டத்திற்கு நாங்கள் அனைவரையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அழைக்கிறோம். இக்கூட்டம் ஸ்லோ (SLOUGH) நகரில் டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி (ஞாயிறு) மதியம் 2 மணி அளவில் அங்குள்ள Upton Lea Community Centre - ல் இன்ஷா அல்லா நடைபெறும்.

நமது மன்றத்தின் துவக்க கூட்டம் ஏப்ரல் மாதம் 24ம் தேதி அன்று East Ham நகரில் நடைபெற்றது அனைவருக்கும் நினைவிருக்கும். அந்த சிறப்பு கூட்டத்தில் நாம் காயலர் பலரை புதியதாக சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. ஆக்கப்பூர்வமான அந்த கூட்டத்தில் பல முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு, தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

எதிர்வரும் (டிசம்பர் 12) கூட்டத்தையும் - இன்ஷா அல்லா - மேலும் மெருகூட்டும் விதமாக அணிகளுக்கான வினாடிவினா போட்டி மற்றும் இதர விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேறு நிகழ்ச்சிகளை இத்துடன் இணைப்பது குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.

மன்ற துவக்கபட்டதிலிருந்து இதுவரை உள்ள செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் விளக்கப்படும். மேலும் புதிதாக யு.கே. நாட்டிற்க்கு வந்துள்ள காயலர்களை அறிமுகம் படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.

ஆகவே யு.கே.-ல் உள்ள காயலர்கள் இக்கூட்டத்தில் தாங்கள் கலந்து கொள்வதை எம்மிடம் கூடிய விரைவில் உறுதிப்படுத்தும் படி கேட்டு கொள்கிறோம். எத்தனை பேர் கலந்து கொள்வார்கள் (குடும்பம் மற்றும் சிறுவர் உட்பட) என்பதை முன்னரே தெரிவித்தால் உணவு ஏற்பாட்டிற்கு எளிதாக இருக்கும்.

நாள்: டிசம்பர் 12, 2010; மதியம் 2:00 மணி
இடம்: உப்டன் லீ சமூக கூடம், வெக்ஸ்ஹம் சாலை, ஸ்லொவ் SL2 5JW
அருகாமை ரயில் நிலையம்: ஸ்லொவ்