KAYALPATNAM WELFARE ASSOCIATION OF UNITED KINGDOM WELCOMES YOU ALL

KAYALPATNAM WELFARE ASSOCIATION OF UNITED KINGDOM WELCOMES YOU ALL
Email: uk@kayalpatnam.org.uk / Web: www.kayalpatnam.org.uk

Friday, December 19, 2014

பத்தாவது பொதுக்குழுக்கூட்டம் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி....

ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் பத்தாவது பொதுக்குழுக்கூட்டம் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி , அக்டோபர் மாதம் 11ஆம் தேதி, வோகிங் மாநகரில் அமைந்துள்ள கிராம சமுதாய அரங்கில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.





கூட்ட நிகழ்வுகள்: 

கூட்டத்திற்கு மன்றத் தலைவர் டாக்டர் செய்யித் அஹ்மத் தலைமை தாங்கினார். மன்றத்தின் ஆலோசகர் பொறியாளர் அபூபக்கர் மற்றும் மன்றத்தின் மூத்த உறுப்பினர் சாலிஹ் மரைக்கார் ஆகியோர் முன்னிலை வகுத்தனர். மன்றத்தின் துணைதலைவர் ஹாபில் அப்துல் மத்தீன் லபீப் கிராஅத் ஓதி பொதுகூட்டத்தைத் துவக்கி வைத்தார்.

பின்னர் மன்றத்தின் செயற்க்குழு உறுப்பினர் செய்து மரைக்கார் வருகை புரிந்தோரை வாழ்த்தி வரவேற்பு உரையாற்றினர்.



தலைவர் உரை: 

பின்னர் கூட்டத் தலைவர் டாக்டர் செய்யித் அஹ்மத் தலைமையுரையாற்றினார்.



அதில் மன்றத்தின் கடந்த கால பணிகள் குறித்தும், எம் மன்றத்தின் திட்டமான முதலுதவி பயிற்சி வகுப்புகளை குறித்தும் மேலும் மன்றம் ஆற்ற வேண்டிய பணிகளை மிக அழகுடன் விளக்கினார்கள்.

துணை தலைவர் உரை: 

பின்னர் மன்ற துணைத்தலைவர் ஹாபிழ் அப்துல் மத்தீன் லபிப் அவர்கள் நம் மன்றத்தால் நடத்தப்படும் திட்டங்கள் மிகுந்த தரத்துடன் இருக்க வேண்டிய அவசியத்தையும், அதன் மூலம் நாம் பிற்காலத்தில் அடைய இருக்கிற பலன்களையும் அழகுடன் எடுத்துரைத்தார்கள்.



பின்னர் மன்றத்தின் ஆலோசகர் பொறியாளர் அபூபக்கர் அவர்கள் மன்றம் நடத்தும் பணிகளின் தரத்தின் அவசியத்தை விளக்கினார்கள். தனது கடந்த கால வளைகுடா அனுபவங்கள் மற்றும் மன்றம் சார்ந்த செயல்பாடுகளை எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதை அழகுடன் எடுத்துரைத்தார்கள்.

மன்றத்தின் மூத்த உறுப்பினர் சாலிஹ் மரைக்கார் அவர்கள் மன்றத்தின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டினர்கள். மேலும் மன்றம் சத்து குறைபாடு குறித்து காயல் மாநகர மக்களுக்கு விழிப்புணர்வு முகாமை நடத்த வேண்டும் என்று கேட்டுகொண்டார்கள்.

வரவு - செலவு கணக்கறிக்கை: 

பின்னர், சென்ற கூட்ட நடப்புகள் மற்றும் மன்றத்தின் வரவு - செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் சதகதுல்லாஹ் குளம் அவர்கள் விளக்கிப் பேசினார். மன்றத்தின் சந்தாவை அதிகரிக்க வேண்டும் என்றும் அதன் மூலம் பல செயல் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்றும் கூறினார்.

முதலுதவி பயிற்சி வகுப்புகள்: 

மன்றத்தின் சார்பில் அன்மையில் நடைபெற்ற பெண்களுக்கான நான்காவது முதலுதவி பயிற்சி வகுப்புகள் குறித்து பொதுக்குழு உறுப்பினர் ஷாகுல் ஜிப்ரி கரீம் அவர்கள் விளக்கி பேசினார்.



இப்பயிற்சி வகுப்புகள் கிடைத்த அமோக வரவேற்பை அவர் மன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்தார்.

கலந்துரையாடல்: 

பின்னர் மன்ற உறுப்பினர்களுக்கு இடையே திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மன்றத்தின் அடுத்த முதலுதவி பயிற்சி வகுப்பு வருகின்ற மார்ச் மாதம் நடத்துவது என்றும் இடம் மற்றும் நேரம் பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

விருந்தோம்பல்: 

மதிய தொழுகைக்கு பின்னர் உணவு விருந்தோம்பல் நடைபெற்றது.

மழலையருக்கான விளையாட்டுப் போட்டிகள்: 

உணவு இடைவேளைக்கு பின்னர் மழலை செல்வங்களின் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதனை மன்றத்தின் பெண்கள் பிரிவு பிரிதிநிதி அஜ்ஹா நூஹு நீயாஸ் மற்றும் ஜமீலா ஜப்பார் மரைகார் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். அதனை தொடர்ந்து சிறுவர் - சிறுமிகளின் இஸ்லாமிய நிகழ்சிகள் நடைபெற்றன. பின்னர் அனைத்து குழந்தைகளுக்கும் பரிசு அளிக்கப்பட்டது.







மரபுச்சொல் மற்றும் வினாடி-வினா போட்டி: 

சிறார்களின் நிகழ்சிகளை தொடர்ந்து, வினாடி-வினா போட்டி நடைபெற்றது. மன்றத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, நம் தாயகமாம் காயல்பட்டினம் நகரின் மரபுச் சொல்வழக்கை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட போட்டி, உறுப்பினர்களிடையே மிகுந்த மனமகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தந்து, சில மணி நேரங்கள் ஊரிலேயே இருந்த அனுபவத்தைப் பெற்றுத் தந்தது.



தமிழ் மொழித் தொடர்பு முற்றிலும் அற்றுப்போன ஐக்கிய ராஜ்ஜியம் நாட்டில் இதுபோன்ற போட்டிகள் அடிக்கடி நடத்தப்பட்டால், வளரும் தலைமுறைக்கு தாய்மொழியுடன் தொடர்பிருந்துகொண்டே இருக்கும் என்பது அங்கு அனைவராலும் உணரப்பட்டது. போட்டியில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. காயல் நகர மரபுச்சொல் மற்றும் வினாடி - வினா தொகுப்பாளராக சகோதரர் நூஹு நியாஸ் அவர்கள் திறம்பட நிகழ்சிகளை நடத்தினார்.

பின்னர் மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர் ஷாகுல் ஜிப்ரி கரீம் அவர்கள் நடத்திய 'பிங்கோ' விளையாட்டு போட்டி நடைபெற்றது. மன்ற உறுப்பினர்கள் மிக அமைதியாக இருந்து இப்போட்டியில் பங்குபெற்றனர்.

சிறந்த தம்பதியர் போட்டி: 

பின்னர் மன்றத்தின் உறுப்பினர் காதர் சுலைமான் அவர்கள் நடத்திய 'சிறந்த தம்பதிகளுக்கான' போட்டி நடைபெற்றது.



குலுக்கல் மூலமாக ஆறு உறுப்பினர்களின் பெயர்கள் தேர்வு செயப்பட்டு அவர்களுக்கான கேள்விகள் வழங்கப்பட்டன. பெண்களுக்கான கேள்விகள் அவர்களின் பகுதிக்கு வழங்கப்பட்டன. போட்டியின் முடிவில் கேள்வி பதில்கள் சரிபார்க்கப்பட்டு சிறந்த தம்பதிகள் தேர்வு செய்யப்பட்டனர். முதலாவது பரிசை மருத்துவர் அபூ தம்பி தம்பதினர்களும், இரண்டாம் பரிசை குளம் சதகதுல்லாஹ் தம்பதினர்களும் பெற்றனர். இப்போட்டியை சகோதரர் காதர் சுலைமான் அவர்கள் சிறப்பாக நடத்தினார்.

கடந்த கால பொதுக்குழுவின் படங்கள் வினியோகம்: 

மன்றத்தின் கடந்த கால பொதுக்குழு கூட்டத்தின் புகைப்படங்கள் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டன.



அதனை தொடர்ந்து மன்ற உறுப்பினர்களின் துவாவுடன் நிகழ்சிகள் இனிதே நிறைவுபெற்றது.