KAYALPATNAM WELFARE ASSOCIATION OF UNITED KINGDOM WELCOMES YOU ALL

KAYALPATNAM WELFARE ASSOCIATION OF UNITED KINGDOM WELCOMES YOU ALL
Email: uk@kayalpatnam.org.uk / Web: www.kayalpatnam.org.uk

Monday, April 21, 2014

பெண்களுக்கான 'மூன்றாவது முதலுதவி பயிற்சி வகுப்பு' - 06.04.2014





ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றம் (KWAUK), லண்டன் மற்றும் துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளி இணைந்து நடத்திய  பெண்களுக்கான 'மூன்றாவது முதலுதவி பயிற்சி வகுப்பு' , ஏப்ரல் மாதம்  06ஆம் தேதி, துளிர் கேளரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துல்லிலாஹ்....




நிகழ்ச்சியின் துவக்கமாக இறைமறை மற்றும் தமிழ் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சிகள் இனிதே ஆரம்பிக்கப்பட்டது. துளிர் சிறப்பு பள்ளியின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சகோதரி. சித்தி ரம்ஜான் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


துளிர் சிறப்பு பள்ளியின் நிறுவனர் வழக்குரைஞர் அஹ்மத் அவர்கள் நிகழ்ச்சியை அறிமுகபடுத்தி, வருகை புரிந்தோரை வாழ்த்தி வரவேற்றார்.  சமூக ஆர்வலர் சகோதரி S.O.B. ஆய்ஷா அவர்கள் நிகழ்சிக்கு தலைமை தாங்கினார்கள்.  காயல்பட்டினம் நகரமன்ற உறுப்பினர்கள் சகோதரி. A.T. முத்து ஹாஜிரா (4வது வார்டு) மற்றும் சகோதரி A.ஹைரியா (9வது வார்டு) ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். 


ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் தலைவர் மருத்துவர். S.O. செய்து அஹமத் அவர்களின் வரவேற்பு உரையை, மன்றத்தின் முதலுதவி ஒருங்கிணப்பாளர் சகோதரர். M.M. ஷாகுல் ஹமீது அவர்கள் வாசித்து வாழ்த்துரை வழங்கினார்கள்.


தூத்துக்குடி செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் பயிற்சியாளர் மருத்துவர். A. அச்சுதன் அவர்கள் முதலுதவி பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தார்கள். பயிற்சியின் ஆரம்பமாக செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் நிறுவனத்தின் சேவை குறித்து ஒரு சிறு விளக்கம் அளித்தார்கள். அதன் பின்னர் பயிற்சிகள் காணொளி மூலம் ஆரம்பமானது. பயிற்சி முகாமில் மொத்தம் 65 பெண் பயிற்சியாளர்கள் கலந்துகொண்டார்கள்.

முதலுதவி பயிற்சி இரு கட்டங்களாக நடைபெற்றது. முதலாவதாக உள்ளரங்க பயிற்சி வகுப்புகளாகவும் பின்னர் வெளிப்புற பயிற்சிகளாகவும் நடைபெற்றது. 

Inline images 2


இந்த பயிற்சி வகுப்பில், நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் விபத்துக்களை எவ்வாறு தடுப்பது மற்றும் விபத்துகள் ஏற்பட்டால் எவ்வாறு துரிதமாக செயல்படுவது என்பதை செயல்முறை பயிற்சியாக காண்பிக்கப்பட்டது. பயிற்சியில் பங்குபெற்ற அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டு பயன்பெற்றார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் மருத்துவர்களுடன் கேள்வி பதில் நிகழ்ச்சி இடம் பெற்றது.


நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பயிற்றுவித்த மருத்துவர் A. அச்சுதன் மற்றும் குழுவினருக்கு, துளிர் சிறப்பு பள்ளியின் செயலாளர் எம்.எல்.ஷேக்னா அவர்கள் பொன்னாடை போற்றி கவுரவிக்கப்பட்டார். மேலும் அவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.


பயிற்சியில் கலந்துகொண்ட அனைத்து  பயிற்சியாளர்களுக்கும் ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் மருத்துவர். S.O. செய்து அஹமத் அவர்கள் தொகுத்த முதலுதவி குறித்த சிறு விளக்க புத்தகம் வழங்கப்பட்டது. 


பின்னர் பயிற்சியில் பங்கேற்ற பயிற்சியாளர்கள் அனைவருக்கும் பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது. இப்பயிற்சி சான்றிதழை சகோதரி S.O.B. ஆய்ஷா, சகோதரி.A.T. முத்து ஹாஜிரா மற்றும் சகோதரி A.ஹைரியா ஆகியோர் வழங்கினார்கள்.



காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சமூக சேவை பிரிவான 'இரத்ததான மையத்தின் ' சார்பில் கலந்துகொண்ட அனைவர்களுக்கும் 'முதலுதவி பெட்டகம்' அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதனை அந்த மையத்தின்  சார்பில் சகோதரர் ''கலாமீஸ்'  யாசிர் அவர்கள் சிறப்புடன் ஏற்பாடு செய்திருந்தார்கள்.


இறுதியாக தேசிய கீதம் பாடப்பட்டு நிகழ்ச்சிகள் இனிதே நிறைபெற்றன. இந்த முதலுதவி பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனைத்து பயிற்சியாளர்களுக்கும்,  இலவச போக்குவரத்து மற்றும் சிற்றுண்டி வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 


எங்களை தொடர்பு கொள்ள::
மின்னஞ்சல் முகவரி: uk@kayalpatnam.org.uk 
இணையதள முகவரி: www.kayalpatnam.org.uk