KAYALPATNAM WELFARE ASSOCIATION OF UNITED KINGDOM WELCOMES YOU ALL

KAYALPATNAM WELFARE ASSOCIATION OF UNITED KINGDOM WELCOMES YOU ALL
Email: uk@kayalpatnam.org.uk / Web: www.kayalpatnam.org.uk

Thursday, March 18, 2010

KAYAL INAUGURAL MEETING 24TH APRIL 2010 (TAMIL VERSION)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறோம்...

அன்பின், ஐக்கியப் பேரரசு (யு.கே.) வாழ் காயலர் சகோதர - சகோதரிகளே! உங்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...

இம்மடல் தங்கள் யாவரையும் புரண உடல் நலமுடனும், உத்வேகத்துடன் கூடிய நல்ல வாழ்க்கைச் சூழலுடனும் சந்திக்கட்டுமாக... ஆமீன்.

ஐக்கியப் பேரரசு (யு.கே.)யில் பரவலாக வசித்து வரும் நாம் அனைவரும் ஒன்றுகூடுவதற்காக நீண்ட காலமாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதும், நமது வேலைப்பளு நிறைந்த வாழ்க்கை முறைக்கிடையில் அதனை செயல்படுத்த முடியாத நிலையும் நாமறிந்ததே!

எனினும்,
நம் யாவரையும் சங்கமிக்கச் செய்து இணைக்கவும்,
நாம் ஒருவரையொருவர் இன்னும் சிறப்பாகப் புரிந்துகொள்வதற்காகவும்,
நமக்கிடையேயுள்ள சுவையான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காகவும்,
நம் தாயத்தின் நடப்புகள் குறித்து விவாதித்து நல்ல பல செயல்திட்டங்களை உலகம் தழுவிய அளவில் இணைந்து செய்வதற்காவும்,

தங்கள் யாவரின் மனப்புர்வமான ஒத்துழைப்புடன், நமது காயலர்கள் சிலர், நமக்கென ஓர் அமைப்பை இங்கு துவக்குவதற்கான ஏற்பாடுகளை கடந்த சில மாதங்களாக முனைப்புடன் செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 24.04.2010 சனிக்கிழமையன்று நமக்கென புதிய அமைப்பைத் துவக்குவதற்கான துவக்கக் கூட்டத்தை ஈஸ்ட் ஹாமில் கூட்ட நாடியுள்ளோம். (கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்து விரைவில் அவரவர் மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் தெரிவிக்கப்படும்.)

கூட்டத்திற்கான அழைப்பு அனைவரின் மின்னஞ்சல் முகவரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. அந்த அழைப்புக் கடிதத்திற்கு, இந்த வார இறுதிக்குள் - அதாவது 21.03.2010 ஞாயிற்றுக்கிழமைக்குள் தங்களின் மேலான ஒப்புதல் அடங்கிய பதிலை அதே மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித் தந்தால், துவக்கக் கூட்டம் சிறப்புற நடத்தப்படுவதற்கு அது மிகவும் உதவியாக அமையும்.

இது குறித்த மேலதிகள விபரங்களை தங்களிடமிருந்து பெற்றிடும் பொருட்டு, சில விபரங்களைக் கேள்விகளாக்கி தங்களுகு;கு எலக்ட்ரானிக் படிவமாக அனுப்பி வைத்துள்ளோம். அவற்றை இயன்றளவுக்கு விரைவாகப் பு+ர்த்தி செய்து எமக்கு அனுப்பித் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த ஏற்பாடுகள் குறித்தும், புதிய அமைப்பு துவக்கம் குறித்தும் தங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள், ஆலோசனைகள் இருப்பின், எமது கீழ்க்காணும் தொடர்பு முகவரிக்கு தயங்காமல் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்தச் செய்தியை, யு.கே.யில் வசிக்கும் தங்களுக்கு அறிமுகமான இதர காயலர்கள் அனைவருக்கும் ஆர்வத்துடன் அனுப்பி வைத்து, அவர்களையும் நமது துவக்கக் கூட்டத்தில் பங்கேற்கச் செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

யு.கே. காயலர்களுக்காக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள kayalsinuk@googlegroups.com என்ற குழுமத்தில் இணையக் கோரி தங்கள் யாவருக்கும் அழைப்பு அனுப்பியுள்ளோம். அதனை ஏற்றுக்கொள்வதன் மூலம் நமது குழுமத்தின் அவ்வப்போதைய நடப்புகள் குறித்து தங்களுக்கு விரைவாகத் தெரியப்படுத்திட உதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.